மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ளது மணக்குடி கிராமம் இங்குள்ள மேலத்தெருவில் வசித்து வந்தவர் இராமையன் இவர் இறந்த பிறகு அவரது மனைவி சுசிலா (வயது 65), குடிசை வீட்டில் மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்து வந்துள்ளார். வீட்டின் கூரை மாற்ற கூட வழி இல்லாத அவரது நிலைய அறிந்த பாரதி மோகன் என்ற சமூக ஆர்வலர் நண்பர்கள் உதவியுடன் அவருக்கு சிமெண்ட சிலாப் சுவர் எழுப்பி, மேற்கூரையை சிமென்ட் சீட்டு போட்டு, ரு - 2 - லட்சம் ரூபாயில் கட்டி கொடுத்து திறப்பு விழா நடைபெற்றது, இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு அந்த ஏழை மூதாட்டிக்கு வீடு கட்டி கொடுத்த சமூக ஆர்வலர் பாரதிமோகனுக்கு பாராட்டு தெரிவித்து, சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
Monday, March 18, 2024
Home
மயிலாடுதுறை மாவட்டம்
குடிசைக்கு கீற்று கூட வாங்க முடியாமல் வறுமையில் வாடிய மூதாட்டி..... நண்பர்கள் உதவியுடன் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டி கொடுத்த சமூக ஆர்வலர்......
குடிசைக்கு கீற்று கூட வாங்க முடியாமல் வறுமையில் வாடிய மூதாட்டி..... நண்பர்கள் உதவியுடன் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டி கொடுத்த சமூக ஆர்வலர்......
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment