செங்கம் அருகே தொடர் சாலை விபத்து..... கோழியை பலி கொடுத்து சிறப்பு பூஜை..... - MAKKAL NERAM

Breaking

Monday, March 18, 2024

செங்கம் அருகே தொடர் சாலை விபத்து..... கோழியை பலி கொடுத்து சிறப்பு பூஜை.....


திருவண்ணாமலை மாவட்டம்,செங்கம் அடுத்த பக்கிரி பாளையம் பகுதியில் திருவண்ணாமலை - பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ச்சியாக கோர விபத்துக்கள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. இதனால் அப்பகுதியில் இரவு நேரங்களில் ஆவிகள் அட்டகாசம் அதிகரித்து இருப்பதாகவும்,இரவு 12 மணிக்கு மேல் குழந்தைகள் அழுவும் போல் சத்தம் கேட்பதாகவும்,அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும் ஊர் பொதுமக்களும் பயத்துடன் பீதி அடைந்துள்ளனர். இதன காரணமாக ஊர் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து அந்த இடத்தில் நேரில் சென்று பூசாரிகள் சிறப்பு பூஜை செய்து கோழி சேவலை நரபலி கொடுத்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட  செய்தியாளர் S. சஞ்சீவ்

No comments:

Post a Comment