எனது உயிரை தியாகம் செய்வேன்.நான் பாரத மாதாவின் பூசாரி..... பிரதமர் மோடி - MAKKAL NERAM

Breaking

Monday, March 18, 2024

எனது உயிரை தியாகம் செய்வேன்.நான் பாரத மாதாவின் பூசாரி..... பிரதமர் மோடி

 

ராகுல் காந்தியின் நேற்றைய ’சக்தி’ என்ற பிரயேகத்துக்கு பாஜக தீவிரமாக எதிர்வினையாற்றி வருகிறது. அதன் உச்சமாக பிரதமர் மோடி இன்று தெலங்கானா மாநிலம் ஜாக்டியல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய போது, பெண்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்புக்காக நெக்குருகினார்.ராகுல் காந்தியின் நியாய யாத்திரை நிறைவு விழாவில் நேற்று பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “நாங்கள் மிகப்பெரும் ’சக்தி’க்கு எதிராக போரிட்டு வருகிறோம்” என்றார். 

ஆளும்கட்சியான பாஜக அதன் விசாரணை அமைப்புகளால் எதிர்க்கட்சியினரை மிரட்டுவதை சுட்டிக்காட்டி, ’மிகப்பெரும் ’அதிகார’த்துக்கு எதிரான தங்களுடைய போராட்டம் என்பதை ’சக்தி’க்கு எதிரான போராட்டமாக’ அவர் வர்ணித்தார். மேலும் மோடி ஒரு அதிகாரத்திற்காக (சக்தி) வேலை செய்யும் ஒரு முகமூடி எனவும் சாடினார்.ராகுலின் ’சக்தி’ பிரயேகத்தை கெட்டியாக பிடித்துக்கொண்ட பாஜக, பெண்களைக் குறிக்கும் ’சக்தி’ என்பதற்கு எதிராக அவர் பேசியதாக விமர்சித்து வருகிறது. அதையே பிரதமர் மோடியும், இன்றைய தனது பிரச்சாரக் கூட்டத்தில் ராகுலையும், இந்தியா கூட்டணியையும் வறுத்தெடுத்தார்.என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு தாயும், ஒவ்வொரு மகளும் சக்தியின் வடிவம்; அவர்களை நான் வணங்குகிறேன். இந்தியா கூட்டணி சக்தியை அழிப்பதாக அறிவித்துள்ளது. அவர்களின் சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் பாதுகாப்பிற்காக எனது உயிரை தியாகம் செய்வேன். நான் பாரத மாதாவின் பூசாரி.

இந்த தேர்தல் சக்தியை அழிக்க நினைப்பவர்களுக்கும் அவர்களை வழிபடுபவர்களுக்கும் இடையிலான சண்டை. சந்திரயான் 3 வெற்றியை தேசம் ‘சிவசக்தி’க்கு அர்ப்பணித்துள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் ’சக்தி’யை அழிக்கப் போகிறோம் என்கிறார்கள்” என்று குமுறினார் மோடி.

No comments:

Post a Comment