போதைப்பொருள் தடுப்பு தொடர்பான புகார் மனுவை ஆளுநரிடம் அளித்தார் எடப்பாடி பழனிசாமி
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஆர்.என்.ரவியை, எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.
அப்போது போதைப்பொருள் தடுப்பு தொடர்பான புகார் மனுவை கவர்னர் ஆர்.என். ரவியிடம், அவர் வழங்கினார்.
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு என்றும் சமீபத்தில் பறிமுதலான போதைப்பொருட்களின் விவரங்கள் குறித்த பட்டியலையும் கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பில் , அ.தி.மு.க.வின் கே.பி. முனுசாமி , வேலுமணி , திண்டுக்கல் சீனிவாசன் , தங்கமணி ஆகியோர் உடனிருந்தனர்.
No comments