கிருஷ்ணகிரி: ஏடிஎம் எந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சம் திருடிய கொள்ளையர்கள் - MAKKAL NERAM

Breaking

Saturday, April 6, 2024

கிருஷ்ணகிரி: ஏடிஎம் எந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சம் திருடிய கொள்ளையர்கள்

 

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் எஸ்.பி.ஐ. வங்கியின் எ.டி.எம். மையம் உள்ளது. அந்த எ.டி.எம். மையத்திற்குள் இன்று அதிகாலை நுழைந்த கொள்ளையர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை வெல்டிங் எந்திரத்தால் உடைத்துள்ளனர்.

பின்னர், ஏ.டி.எம். எந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த 10 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச்சென்றனர். இந்த கொள்ளை குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment