விருதுநகர்: கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி.... பிறந்தநாளில் சோகம்.... - MAKKAL NERAM

Breaking

Monday, April 8, 2024

விருதுநகர்: கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி.... பிறந்தநாளில் சோகம்....


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த சக்தி பிரகாஷ் திருச்சியில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று தனது பிறந்த நாளை பூங்கொடி கிராமத்தில் தன்னுடைய நண்பர்களுடன் மது அருந்தி கொண்டாடியுள்ளார்.

அதன் பிறகு அருகில் இருந்த கிணற்றில் குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக சக்தி பிரகாஷ் கிணற்றில் மூழ்கியுள்ளார். பிறகு தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment