தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க உத்தரவு - MAKKAL NERAM

Breaking

Tuesday, May 21, 2024

தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க உத்தரவு

 

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு மே மாதம் 2.5 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவரை ஆறு டிஎம்சி அளவுக்கு கர்நாடகா தண்ணீரை திறந்து விடாமல் நிலுவையில் வைத்துள்ள நிலையில் அந்த மாநிலத்தில் உள்ள முக்கிய அணைகளில் 19.17 டிஎம்சி தண்ணீர் உள்ளது.

அவர்களது குடிநீர் தேவைக்கு நான்கு டிஎம்சி தண்ணீர் மட்டுமே போதுமானதாக இருப்பதால் நிலுவை தண்ணீரை திறந்து விடுவதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை என்று தமிழக அரசு அதிகாரிகள் ஆணையத்தின் முன்பு வாதத்தை முன்வைத்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment