காதலில் விழுந்த 16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்..... அதிரடி காட்டிய போலீசார் - MAKKAL NERAM

Breaking

Tuesday, June 18, 2024

காதலில் விழுந்த 16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்..... அதிரடி காட்டிய போலீசார்

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை உதயகுமார் காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் கும்பகோணம் அருகே இருக்கும் ரஞ்சித் என்பவருக்கு சிறுமியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த திருமணத்தை விரும்பாத சிறுமி காதலன் உதயகுமாரை செல்போன் மூலம் அழைத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இந்நிலையில் உதயகுமார் கடந்த 9- ஆம் தேதி இரவு 12 மணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று  சிறுமியை அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்கு சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல்ல அலுவலகத்திற்கு புகார் வந்தது. ரஞ்சித், உதயகுமார் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குபதிந்து இருவரையும் கைது செய்தனர். மேலும் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த ரஞ்சித்தின் தாய், தந்தை சிறுமியின் தாய் தந்தை என 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment