திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே அம்பேத்கர் சிலை அருகில் ராகுல் காந்தியின் 54வது பிறந்த நாளை முன்னிட்டு 54 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டி காங்கிரசார் கொண்டாடினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர். செங்கம். ஜி. குமார் தலைமையில், மாவட்ட எஸ் சி எஸ் டி பிரிவு தலைவர்.குணசேகரன், புதுப்பட்டு ராஜி (பிபிசி) ஆகியோர் முன்னிலையில் நகரத் தலைவர். ஜி காந்தி மற்றும் வட்டார தலைவர்கள் சுப்பிரமணி ரத்தினம், நேரு அண்ணாமலை, வடக்கு வட்டாரச் செயலாளர். சஞ்சீவ் ஆகியோர் சிறப்பு ஏற்பாட்டில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு கேக் மற்றும் இனிப்பு, உணவுகளை வழங்கி பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.
No comments:
Post a Comment