முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது - MAKKAL NERAM

Breaking

Monday, June 3, 2024

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது


திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம்,வல்லூர்,அத்திப்பட்டு பகுதிகளில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக கட்சிக் கொடிகளை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் ஏற்பாட்டில் வல்லூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி பிறந்த நாள் கேக் வெட்டப்பட்டு கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.பின் 101 கலைஞரின் சிறிய சிலைகள் கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திவடிவேல்,துணைத் தலைவர் எம்.டி.ஜி.கதிர்வேல் ஏற்பாட்டில் ஒன்றிய கழகச் செயலாளர் வல்லூர் எம். எஸ்.கே.ரமேஷ் ராஜ் பத்தாம் வகுப்பு  தேர்வில் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்த குஷிசிங் என்ற மாணவிக்கு ரூபாய்.20 ஆயிரமும், இரண்டாம் இடம் பிடித்த மதுமிதாவுக்கு ரூபாய் 10 ஆயிரமும்,மூன்றாம் இடம் பிடித்த மாணவன் நிரஞ்சனுக்கு ரூபாய் 5 ஆயிரமும்  ஊக்கத்தொகையாக  வழங்கினார். சிறப்பாக பணிபுரிந்த அத்திப்பட்டு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 பின்னர் மூத்த கட்சி நிர்வாகிகளுக்கு பொற்கிழியும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களூக்கு தலா 10 கிலோ அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி கேக் வெட்டி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர். இதேபோன்று தடப்பெரும்பாக்கம்,வாயலூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. மேலும் மற்ற ஊராட்சிகளில் கலைஞரின் திருவுரு படம் வைக்கப்பட்டு கழக கொடி ஏற்றி பின் பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பகலவன்,பாஸ்கர் சுந்தரம்,உமா மகேஸ்வரி,கதிரவன்,சுப்பிரமணி,அன்புவாணன்,ருக்மணி மோகன்ராஜ்,ராஜா,பா.து.தமிழரசன், காட்டுப்பள்ளி சேதுராமன்,நந்தியம் கலாவதி,செம்மொழி தாஸ், பாளையம்,மோகனசுந்தரம்,செல்வமணி,தசரதன்,ராமமூர்த்தி, மணிமாறன், மோகன்,சாமுவேல்,மதன்குமார்,வழக்கறிஞர் நித்திய குமார்,சிற்றரசு,இளைஞர் அணி தமிழரசன்,பாலச்சந்தர்,கோபால்,பிரபாகரன்,ஜெ.எஸ்.கன்னிமுத்து உள்ளிட்ட ஏராளமான கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்,உள்ளாட்சி மன்ற முன்னாள்,இந்நாள் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment