நடிகை ராதிகா சரத்குமார் பாஜக கட்சி சார்பில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார்.இதற்கு முன் தனியாக கட்சி நடத்தி வந்த சரத்குமார் தனது கட்சியை ராதிகாவின் ஆலோசனையை கேட்டு பாஜகவில் இணைப்பதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராதிகா போட்டியிட்ட விருதுநகரில் தான் நடிகர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்டார். ஆனால் அவர்கள் இருவரையும் விட திமுக வேட்பாளர் தான் முன்னணியில் இருக்கிறார். ராதிகாவுக்கு மூன்றாவது இடம் தான் கிடைத்து இருக்கிறது. அவருக்கும் திமுக வேட்பாளருக்கும் கிடைத்து ஒட்டு வித்தியாசம் இரண்டு லட்சத்திற்கும் மேல் இருக்கிறது.இந்நிலையில் நடிகை ராதிகா தனது தோல்வி பற்றி சமூக வலைத்தளத்தில் உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.
"எல்லா போர்களும் ஜெயிப்பதற்காக அல்ல. சில போர்கள் இந்த உலகத்திற்கு யாரோ ஒருவர் போர்க்களத்தில் இருந்தார் என சொல்லத்தான். உங்கள் அன்புக்கு நன்றி" என அவர் பதிவிட்டு உள்ளார்.
No comments:
Post a Comment