பாதுகாப்பு குறைபாடு..... டெல்லியில் இருந்து மும்பை புறப்பட்ட விமானம் அகமதாபாத்தில் தரையிறக்கம் - MAKKAL NERAM

Breaking

Monday, June 3, 2024

பாதுகாப்பு குறைபாடு..... டெல்லியில் இருந்து மும்பை புறப்பட்ட விமானம் அகமதாபாத்தில் தரையிறக்கம்

 

ஆகாசா விமானம் இன்று காலை தலைநகர் டெல்லியில் இருந்து மும்பை நோக்கி புறப்பட்டது. அந்த விமானத்தில் 186 பயணிகள், குழந்தை, 6 விமான ஊழியர்களுடன் என மொத்தம் 193 பேர் பயணித்தனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் உடனடியாக அகமதாபாத் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விமானத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு என்ன? நடுவானில் விமானத்தில் பயணிகள் ஏதேனும் தகராறில் ஈடுபட்டனரா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

No comments:

Post a Comment