கும்மிடிப்பூண்டி: சென்னாவரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ லட்சுமி அம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மேலகழனி ஊராட்சி சென்னாவரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ லட்சுமி அம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடந்த செவ்வாய் அன்று காலை 6 மணி அளவில் பந்தக்கால் கோ பூஜை கணபதி பூஜை வாஸ்து சாந்தி மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்று காலை 5 மணி அளவில் கங்கா பூஜை நாடி சந்தனம் நடைபெற்ற பின்னர் கடன் புறப்பாடு நடைபெற்றது.
அது தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் ஸ்ரீ லட்சுமி அம்மன் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் தீபாரதனை அன்னதான பிரசாத விநியோகம் நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற நிகழ்வில் பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டு புரோகியர்களால் பூஜிக்கப்பட்ட புனித நீரானது அம்மன் சன்னதி மீது தெளிக்கப்பட்ட பின்னர் காத்திருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் ராஜேஷ் ரெட்டியார் ரமேஷ் ராஜா.ரெட்டியார் மாரிமுத்து ரெட்டியார் நரேஷ் ரெட்டியார் விகா ரெட்டியார் ஆகியோருடன் கிராமப் பெரியோர்கள் இளைஞர்கள் செய்திருந்தனர். கோவில் நிர்வாகி சார்பில் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
No comments