கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமாரின் பிறந்தநாள் விழா
கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவரும் அதிமுக மாவட்ட நிர்வாகியுமான கே.எம்.எஸ்.சிவக்குமாரின் 48வது பிறந்தநாள் விழா கும்மிடிப்பூண்டியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து சனிக்கிழமை மாலை கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ். சிவக்குமாரின் ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நிகழ்வில் பட்டாசு வெடித்தும் மேள வாத்தியங்கள் முழங்க உற்சாக நடனத்துடன் அவரை மாலை அணிவித்தும் கிரீடம் அணிவித்தும் வரவேற்றனர்.தொடர்ந்து அனைவரும் முன்னிலையும் கேக் வெட்டி அனைவருக்கும் ஒன்றிக்குழு தலைவர் கே எம் எஸ் சிவகுமார் வழங்கினார்.
இந்த நிகழ்வில் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் சுண்ணாம்புகளும் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம். ரவி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கண்ணம்பாக்கம் சதீஷ், ஏனாதிமேல் பாக்கம் பிரபு, ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயந்தி ஹரிபாபு, சிட்டிபாபு, ஜெயச்சந்திரன், பெத்திக்குப்பம் ஊராட்சி துணைத் தலைவர் குணசேகரன், அதிமுக பிரமுகர் பக்கீர் முகமது, அதிமுக நிர்வாகிகள் காட்வின் கிறிஸ்டோபர், கே.பி. ஆரோன், சிரஞ்சீவி, சிவா, அசோக் குமார், அருண்குமார் உள்ளிட்ட பலரும் ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ். சிவகுமாருக்கு மாலை சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. நிகழ்வை ஒட்டி நடத்தப்பட்ட ஆடல் பாடல், இன்னிசைக் கச்சேரி நிகழ்வை அனைவரும் கண்டு ரசித்தனர்.
No comments