• Breaking News

    அண்ணாமலை தோல்வி அடைந்ததால் பாஜக பிரமுகர் நடுரோட்டில் மொட்டை


    திருச்செந்தூர் அருகே உள்ள முந்திரித்தோட்டத்தை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவர் உடன்குடி  ஒன்றிய  பாரதிய ஜனதா  கட்சி மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு பொதுச் செயலாளராக  இருந்து வருகிறார்.

    இவர் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதே ஊரைச் சேர்ந்த  மாற்றுக் கட்சி நண்பர்களிடம் பாஜக தலைவர்  அண்ணாமலை கோவை  தொகுதியில் நிச்சயம்  வெற்றி பெறுவார். அவ்வாறு அப்படி வெற்றி பெறவில்லை என்றால் பரமன்குறிச்சி பஜாரில்  மொட்டை போட்டு  ரவுண்டானாவை  சுற்றி வருவேன் என சவால் விட்டுள்ளார்.

    இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  தோல்வி அடைந்ததால்  பாஜக பிரமுகர் ஜெய்சங்கர்  இன்று பரமன்குறிச்சி பஜாரில் மொட்டையடித்து கொண்டார் பின்னர் ரவுண்டானாவை சுற்றி  வந்தார் இதை அங்கு நின்ற பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.

    No comments