தமிழக பவுன்சர்களை புறக்கணித்த தமிழக வெற்றிக் கழகம்....? பெயருக்கு மட்டும் தான் தமிழ்.... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் இன்று ஊக்கத்தொகை வழங்குகிறார். முதல் கட்டமாக 21 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு இன்று ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியானது தற்போது தொடங்கி விஜய் பேசி வருகிறார்.இந்நிலையில் விழா அரங்கத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில் துபாயில் இருந்து 50 பவுன்சர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். காதில் மைக், பாக்கெட்டில் ஸ்பீக்கர் என நிகழ்ச்சியை கட்டுக்குள் வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் பவுன்சர்கள் இல்லையா..? அல்லது அவர்களுக்கு திறமை இல்லையா என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகம் என பெயர் வைத்துக்கொண்டு தமிழக பவுன்சர்களை புறக்கணிப்பது ஏன்...? எல்லாம் கண் துடைப்பு தானா...? எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.
No comments