பொன்னேரி தொகுதி மக்கள் உப்பு தண்ணீரை குடிக்கிறார்கள்..... சட்டசபையில் பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் கோரிக்கை
சட்டப்பேரவை யில் நேற்று பொன்னேரி துரை சந்திர சேகர் (காங்கிரஸ்) செய்தி மற்றும் விளம்பரத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங் கேற்று பேசியதாவது:
ஊருக்கே தண்ணீர் கொடுக்கும் எங்கள் பொன்னேரி தொகுதி. கடல் நீரை குடியராக்கி எல்லோருக்கும் கொடுக்கின்ற நாங்கள் காலம் காலமாக உப்பு தண்ணீரை குடித்துக் கொண்டி ருக்கிறோம். அரசு இதற்கு ஒரு பதிலை கொடுக்க வேண்டும்.வல்லூர் அனல் மின் நிலையம் மின்சாரம் தயாரிக்கும் எங்களுக்கு அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. தமிழக முதல்வர் இந்த பிரச்னையை கவ னத்தில் எடுத்துக் கொண்டு, பொன்னேரி மீஞ்சூர் பகுதிக்கு மின் தடை ஏற்படாதவாறு பார்க்கவேண்டும். என்று சட்டசபையில் கோரிக்கை வைத்தார்.
No comments