நாடாளுமன்ற வளாகத்திற்குள் திமுக எம்பி அப்துல்லா தடுத்து நிறுத்தம்..... நடவடிக்கை கோரி கடிதம் - MAKKAL NERAM

Breaking

Wednesday, June 19, 2024

நாடாளுமன்ற வளாகத்திற்குள் திமுக எம்பி அப்துல்லா தடுத்து நிறுத்தம்..... நடவடிக்கை கோரி கடிதம்

 

திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா, நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் நேற்று (ஜூன் 18) பங்கேற்க சென்ற போது CISF பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தபட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இதுதொடர்பாக  நடவடிக்கை கோரி மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா கடிதம்:

மாநிலங்களவைத் தலைவருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “நேற்று பிற்பகல் 3 மணியளவில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த போது, அங்கு பணியில் இருந்த CISF அதிகாரிகள் என்னை தடுத்து நிறுத்தி நாடாளுமன்றத்துக்கு தான் வந்ததன் நோக்கம் என்ன என விளக்க வேண்டும் என கட்டாயப்படுத்தினர்.நாடாளுமன்ற உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ காரியங்கள் ஏதும் இல்லாவிட்டாலும் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க முடியும் என நான் உறுதியாக நம்புகின்றேன்.  மேலும் எனக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால்,  அதை நான் எனது தலைமை பொறுப்பில் இருப்பவரிடம் வெளிப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்.

தமிழ்நாடு மக்கள் மற்றும் மாநில அரசின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் உள்ள ஒருவரிடம், CISF பாதுகாவலர்களின் இந்த நடத்தையால் தவறு. நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாவலர்கள் பணியில் இருந்த போது இதுபோன்ற தவறான நடத்தை இதற்கு முன்பு நடந்ததில்லை. ஆனால் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள CISF பாதுகாவலர்களின் செயல்பாடுகள் மிகுந்த வருத்ததை அளிக்கிறது.என்னிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சிஐஎஸ்எப் பணியாளர்கள் மற்றும் தவறிழைத்த அதிகாரிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கண்ணியத்தையும் உறுதி செய்யவேண்டும்” இவ்வாறு அந்த கடிதத்தில் மாநிலங்களவை திமுக உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment