சங்கரன் கோவில் அருகே கோவை காவல்துறை உயரதிகாரி அலுவலகத்தில் போலீஸ் ரிப்போர்ட்டராக பணிபுரிந்து வந்தவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை - MAKKAL NERAM

Breaking

Saturday, June 8, 2024

சங்கரன் கோவில் அருகே கோவை காவல்துறை உயரதிகாரி அலுவலகத்தில் போலீஸ் ரிப்போர்ட்டராக பணிபுரிந்து வந்தவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள் பட்டியை சேர்ந்தவர் பெரியதுரை இவர் கோவை மாவட்ட காவல்துறை ரிப்போர்ட்ராக பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில் விடுமுறை தினத்திற்காக சொந்த ஊருக்கு வந்த பெரியதுரை குருக்கள்பட்டி அருகே உள்ள கள்ளத்திகுளம் காட்டுப் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

உடனடியாக விரைந்து சென்ற சின்ன கோவிலாங்குளம்காவல்துறையினர் சடலத்தை மீட்டு நெல்லை மாவட்ட மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர் தொடர்ந்து பெரியதுரை வெட்டி செய்து படுகொலை செய்த மர்ம நபருக்கு காவல்துறை வலை வீசி தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்

No comments:

Post a Comment