பெண் போலீசிடம் ரகளை..... சட்டை இல்லாமல் நடு ரோட்டில் உருண்ட போதை வாலிபர் கைது - MAKKAL NERAM

Breaking

Friday, June 28, 2024

பெண் போலீசிடம் ரகளை..... சட்டை இல்லாமல் நடு ரோட்டில் உருண்ட போதை வாலிபர் கைது

 

ஈரோடு மாவட்டம் மேட்டூரில் சம்பவ நாளில் பெண் காவலர் ஒருவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு ஸ்கூட்டரில் 3 வாலிபர்கள் ஒன்றாக வந்துள்ளனர். அவர்களை மடக்கிய பெண் காவலர் லைசன்ஸ் மற்றும் ஆர்சி புக் போன்றவைகளை கேட்டுள்ளார். அந்த சமயத்தில் வாலிபர்கள் மதுபோதையில் இருந்துள்ளனர். 

அவர்கள் போலீஸ் அதிகாரி ரேணுகாவிடம் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டதோடு தகாத வார்த்தைகளால் அவரை திட்டியுள்ளனர்.குறிப்பாக அதில் யோகேஷ் என்ற வாலிபர் தன்னுடைய சட்டையை கழற்றிவிட்டு ரோட்டில் உருண்டதோடு ‌ ரேணுகாவிடம் மிகவும் தவறாக பேசியுள்ளார். உடனே வந்த வாலிபரின் செயலை வீடியோ எடுக்கவும் மற்ற காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும் ரேணுகா தன்னுடைய செல்போனை பாக்கெட்டில் இருந்து எடுத்துள்ளார். 

அப்போது அவருடைய போனை தட்டி விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரி காவல் நிலையத்தில் ரேணுகா புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து யோகேஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

No comments:

Post a Comment