செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பம்மல் தெற்கு பகுதி தலைமை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஜூன் 22 தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு பம்மல் தெற்கு பகுதி தலைவர் பம்மல் A.கண்ணன் தலைமையில் நிகழ்ச்சி ஏற்பாட்டில் பம்மல் கண்ணன், தேவி, ஜெகன், மணிகண்டன், குமார் ஆகியோர் ஏற்பாட்டில் 300 நபர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைவர் மின்னல் குமார் மாவட்ட செயலாளர் அறிவானந்தம் மாவட்ட பொருளாளர் விஜய் தியாகு ஆகியோர் கலந்து கொண்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 300 நபர்களுக்கு புடவை பிளாஸ்டிக் பக்கெட் மற்றும் தண்ணீர் குடம் ஆகியவை வழங்கி தளபதி விஜய் அவர்களின் பிறந்த நாள் விழாவை வெகு விமர்சையாக கொண்டாடினர்.
உடன் நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட பம்மல் தெற்கு பகுதி நிர்வாகிகள் பராசக்தி, நவீன்ராஜ், பிரகாஷ், அருண்குமார், ஜாவித் பவித்ரன், ஜவஹர் மற்றும் பல்லாவரம்,, அனகாபுத்தூர், குரோம்பேட்டை, கீழ்கட்டளை, அஸ்தினாபுரம் ஆகிய பகுதி கழக தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், மற்றும் வழக்கறிஞர் பிரிவு மற்றும் மகளிர் அணி உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment