தலைவர்களின் பாதுகாப்பு விவகாரத்தில் மலிவான அரசியலில் ஈடுபட வேண்டாம்..... பாஜகவுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் - MAKKAL NERAM

Breaking

Tuesday, July 16, 2024

தலைவர்களின் பாதுகாப்பு விவகாரத்தில் மலிவான அரசியலில் ஈடுபட வேண்டாம்..... பாஜகவுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்


 அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடந்த நிலையில், இந்தியாவிலும் பிரதமர் மோடிக்கு எதிராக வன்முறையை ராகுல் காந்தி ஊக்குவிப்பதாக பா.ஜனதா குற்றம் சாட்டியிருந்தது. குறிப்பாக பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது பிரதமர் மோடியின் வாகனம் மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததை சுட்டிக்காட்டி பா.ஜனதா ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா சாடியிருந்தார். பா.ஜனதாவின் இந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் பவன் கெரா கூறுகையில், 'தலைவர்களின் பாதுகாப்பு விவகாரத்தில் மலிவான அரசியலில் ஈடுபடக்கூடாது. காங்கிரஸ் கட்சி வலதுசாரி பயங்கரவாதிகளிடம் மகாத்மா ஜியை இழந்தது. 2 பிரதமர்களை பயங்கரவாதிகளிடம் இழந்து விட்டோம். சத்தீஷ்காரில் பா.ஜனதா ஆட்சியின்போது ஒட்டுமொத்த காங்கிரஸ் தலைமையையும் இடதுசாரி பயங்கரவாதிகளிடம் பறிகொடுத்து இருக்கிறோம்' என சாடினார்.

மேலும் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் அந்த குடும்பத்தினர் குறித்து பிரதமர் மோடியும், ஒட்டுமொத்த பா.ஜனதாவும் பொய்களை பரப்பி காங்கிரஸ் தலைமைக்கு எதிராக மக்களை தூண்டி விடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். காங்கிரஸ் தலைவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு பாதுகாப்பு படையை பிரதமர்தான் மர்மமான முறையில் விலக்கிக்கொண்டதாகவும் கூறினார்.

No comments:

Post a Comment