கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை - MAKKAL NERAM

Breaking

Tuesday, July 16, 2024

கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை

 


நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பல்வேறு ஆறுகள் மற்றும் அணைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு விளை நிலங்களிலும் தண்ணீர் புகுந்துள்ளது.‌ இதன் காரணமாக விளைச்சல் குறைந்ததோடு காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட சந்தைகளில் இருந்து விற்பனைக்காக காய்கறிகள் கொண்டுவரப்படுவது வழக்கம். ஆனால் தற்போது தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் விலை அதிகரித்துள்ளது. அதன்படி நேற்றைய தினம் இருந்த விலையை விட ‌ இன்று தக்காளி விலை அதிகமாக உயர்ந்துள்ளது. அதன்படி கிலோவுக்கு ரூ.35 வரை  அதிகரித்து ஒரு கிலோ 80 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ ரூ. 100 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment