மாணவர்களை காப்பாற்றிவிட்டு திடீர் நெஞ்சுவலியால் உயிரிழந்த ஓட்டுநர் - MAKKAL NERAM

Breaking

Thursday, July 25, 2024

மாணவர்களை காப்பாற்றிவிட்டு திடீர் நெஞ்சுவலியால் உயிரிழந்த ஓட்டுநர்

 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்த மலையப்பன் என்பவர் தனியார் பள்ளி வாகன ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். வழக்கம் போல இவர் இன்று பிள்ளைகளை ஏற்றுக் கொண்டு பள்ளி வாகனத்தை இயக்கினார். அப்போது திடீரென்று இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே பள்ளி வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு ஸ்டிரீங்கில் மயங்கினார்.

இதனைப் பார்த்து அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவரை அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தான் உயிரிழக்கும் தருவாயிலும் மாணவர்களை காப்பாற்றிய இவரின் செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

No comments:

Post a Comment