ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஞ்சலை மீது மேலும் ஒரு வழக்கு - MAKKAL NERAM

Breaking

Thursday, July 25, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஞ்சலை மீது மேலும் ஒரு வழக்கு

 

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சமீபத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் பாஜக முன்னால் நிர்வாகியான அஞ்சலை என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது அஞ்சலையை மேலும் ஒரு வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது கந்துவட்டி புகாரில் அவரை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

No comments:

Post a Comment