எல்லாமே ஸ்மார்ட் தான்.... புதிய ஸ்மார்ட் ஹெல்மெட்டின் சிறப்பம்சங்கள் இதோ.... - MAKKAL NERAM

Breaking

Tuesday, July 16, 2024

எல்லாமே ஸ்மார்ட் தான்.... புதிய ஸ்மார்ட் ஹெல்மெட்டின் சிறப்பம்சங்கள் இதோ....

 

தற்போது போன்கள், வாட்ச்கள், டிவிகள் போன்ற அனைத்து தொழில்நுட்பங்களும் புதிய அம்சங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளிலும் ஸ்மார்ட் தொழில்நுட்பத்திற்கானஅம்சங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ரக வாகனங்களும், முக்கிய பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்படுகின்றன. ஆனாலும் ஒருசில பாதுகாப்பு நடவடிக்கைகளை நாமும் மேற்கொள்வது நல்லது. அந்த வகையில் பைக், ஸ்கூட்டர் போன்ற இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் அணிவது சிறந்தது. ஹெல்மெட் அணிவதன் வாயிலாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க வழி வகுக்கிறது.

இந்நிலையில், ஏத்தர் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகள் மக்கள் மத்தியில் சிறந்து திகழ்கிறது.அண்மையில், ஏத்தர் ரிஸ்ட்டா என்ற ஃபேமிலி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்கூட்டருடன் ஹாலோ என்ற ஸ்மார்ட் ஹெல்மெட்டையும் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த ஹெல்மெட்டை தயாரிக்கும் பணிகளையே ஏத்தர் எனெர்ஜி தற்போது தொடங்கி இருக்கின்றது.


ஸ்மார்ட் ஹெல்மெட்டின் சிறப்பு அம்சங்கள் :


இந்த ஸ்மார்ட் ஹெல்மெட்டில் ஆட்டோ வியர் டிடெக்ட் டெக்னாலஜி பொருத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த ஹெல்மெட் சரியாக போடப்பட்டுள்ளதா என்பதை கண்காணித்து எச்சரிக்கும்.

ஹெல்மெட் உள்ளே ஓடும் மியூசிக் மற்றும் அழைப்புகளை ஸ்கூட்டரின் டேஷ்போர்டு ஸ்கிரீனிலேயே கண்ட்ரோல் செய்ய முடியும்.

ஹெல்மெட் அணிந்து செல்பவர்கள் பாதுகாப்பான பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக வெளியில் உள்ள ஹாரன் சத்தம் உள்ளிட்டவை ஹெல்மெட் உள்ளே கேட்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஹெல்மெட்டிற்கு ரூபாய் 12,999 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட் எல்லாம் ஐஎஸ்ஐ மற்றும் டிஓடி தரச்சான்றுபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment