திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 13 வது வார்டில் பொன்னேரி நகர செயலாளர் செல்வகுமார் மற்றும் அதிமுக நிர்வாகி பொன்னேரியார் ஏ.யுவராஜ் ஆகியோரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களை திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் இனிப்புகள் வழங்கி குழந்தைகளுக்கு கல்வி உபகரங்களையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வார்டு செயலாளர் வெற்றிவேல்,ராமலிங்கம்,வார்டு கவுன்சிலர் மணிமேகலை,நகரத் துணைச் செயலாளர் சத்தியமூர்த்தி, மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஸ்ரீதர்,அருண்,தியாகராஜன்,மெதூர் ரமேஷ், காஞ்சிவாயல் குப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment