தமிழகத்தில் விவசாயிகளின் நலனுக்காக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வரும் நிலையில் அரசு புதுப்புது திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில் விவசாயிகளின் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தயாரிப்புகளை CO – OP Mart என்ற செயலி மூலமாக ஆர்டர் செய்ய முடியும்.ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இந்த செயலியில் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட மசாலா பொருட்கள், தேன், குளியல் சோப்பு, சமையல் எண்ணெய், பூஜை பொருள்கள், உயிரி உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் உள்ளிட்டவை கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment