புதிய தமிழகம் கட்சியின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Thursday, July 25, 2024

புதிய தமிழகம் கட்சியின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி அவர்களின் ஆணைக்கிணங்க தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, மேக்கிலார்பட்டி கிராம ஊர் நாட்டாமை ராமசந்திரன் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தியும், உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் இன்று தேனியில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காவல்துறை கண்டித்தும் கோசங்கள் எழுப்பப்பட்டது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment