மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி..... விண்ணப்பித்த மனு மீது உடனடி தீர்வு கண்ட டி.ஜெ.கோவிந்தராஜ் எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்த பயனாளி
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டி தாலுக்கா கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட் டது ஆரம்பாக்கம் ஊராட்சி இந்த ஊராட்சியில் ஆரம்பாக்கம், எகு மதுரை, தோக்காமூர், ஏடுர், கண்னம்பாக்கம், பூவாலை, ஆகிய ஊராட் சியை சேர்ந்த மக்களுக்கு மக்கள் முதல்வர் நிகழ்ச்சி அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டப த்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அரசு துறை சார்ந்த 17 துறைகள் சார்பாக மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது.இந் நிகழ்ச்சியை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்த ராஜன் துவக்கி வைத்தார் நிகழ் ச்சியில் கும்மிடிப்பூண்டி தாசில்தார் சரவணகுமாரி சேர்மன் சிவகுமார், துணை சேர்மன் மாலதி குணசேகரன் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், ஆணையாளர் தமிழ் மன்னன், எகுமதுரை ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீபிரியா மகேந்திரன், ஆரம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தனசேகரன், ஆரம்பாக்கம் துணைத் தலைவர் ஊராட்சி செயலாளர் சோபன் பாபு.மற்றும் திமுக கட்சி சேர்ந்த நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர் மணிபாலன் மஸ்தான் மீனவர்அணி ஆறுமுகம் அரசுத் துறை அதிகாரிகள் உள்ளி ட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக டிஜே கோவிந்தராஜ் எம்எல்ஏ முகாமில் அமைத்துள்ள அனைத்து துறைகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் மருத்துவ காப்பீடு கோரி வாலிபர் விண்ணப்பித்த மனு மீது உடனடியாக தீர்வு கண்டு டிஜே கோவிந்தராஜ் எம்எல்ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட பயனாளி சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தார்.
No comments