• Breaking News

    அருமந்தை கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் துவக்கி வைத்தார்


    திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்தில் அடங்கிய அருமந்தை கிராமத்தில் தமிழக முதல்வரின் மக்களுடன் முதல்வர் திட்ட முகம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இம்மகாமினை பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.வருவாய்த் துறையின் சார்பில் பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் முன்னிலையில்  பெருங்காவூர்,அருமந்தைசீமாபுரம்,பூதூர், கும்மனூர்,மாபுஸ்கான் பேட்டை,பெரிய முல்லைவாயல், திருநிலை,வைழுதிகை மேடு,உள்ளிட்ட 9 ஊராட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் நடைபெற்றது.

    பொதுமக்கள் தங்களின் தேவைகளான பல்வேறு சான்றிதழ்கள், பட்டா மாற்றம், நிலம் பிரித்தல், மின் இணைப்பு, சொத்து வரி,பெயர் மாற்றம், குடிநீர் தேவை,மகளிர் சுய உதவிகுழு கடன் உதவிகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை குறித்து மனுக்களாக வழங்கினர்.இதனை மின்சாரத்துறை,வருவாய்த்துறை, மருத்துவத்துறை, உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மனுவினை பெற்று நடவடிக்கையை மேற்கொண்டனர் இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    No comments