மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - MAKKAL NERAM

Breaking

Friday, August 9, 2024

மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் விதமாக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வி தொடர ஏதுவாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 

தமிழ் புதல்வன் திட்டத்தை இன்று கோவை அரசு கலைக்கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.இந்தத் திட்டத்தை செயல்படுத்த நடைபாண்டில் 360 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்துவிட்டு உயர்கல்வி பயிலும் 3.28 லட்சம் மாணவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகையாக வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment