• Breaking News

    16 ஆயிரம் கோடி.... யூடியூப் கோமாளிகள் வீட்டில் கொட்டுது பண மழை

     


    யூடியூப் பயன்பாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. கோடிக்கணக்கான பேர் தினமும் யூடியூபில் வெளியாகும் வீடியோக்களை பார்வையிடுகின்றனர். லட்சக்கணக்கான பேர், தினமும் அதில் வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர்.இந்திய யூடியூப் கிரியேட்டர்கள் 7,50,000 பேர், 16,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகின்றனர். இந்திய கலாசாரத்தை உலகம் முழுவதும் பரப்புகின்றனர். இந்திய யூடியூபர்களின் வீடியோக்களில் 15 சதவீதம் பார்வையாளர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்.

    இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஸ்மார்ட் போன் பயன்பாடு, டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாடு காரணமாக, யூடியூப் வீடியோ கிரியேட்டர்களின் எண்ணிக்கை வரும் காலத்தில் பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    பல்வேறு வாய்ப்புகளை செயற்கை நுண்ணறிவு (AI) ஏற்படுத்தி தருகிறது. என்ன தான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வந்தாலும், மனித மூளைக்கு மிஞ்சியது எதுவும் இல்லை என்று யூடியூப் நிறுவன சி.இ.ஓ., நீல் மோகன், 51, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

    No comments