மாமன்னர் ஒண்டிவீரன் மக்கள் பொது நல சங்கம் சார்பில் மாமன்னர் ஒண்டிவீரன் அவர்களின் 253 வது நினைவு தினத்தை முன்னிட்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது - MAKKAL NERAM

Breaking

Thursday, August 22, 2024

மாமன்னர் ஒண்டிவீரன் மக்கள் பொது நல சங்கம் சார்பில் மாமன்னர் ஒண்டிவீரன் அவர்களின் 253 வது நினைவு தினத்தை முன்னிட்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது

 


சென்னை அடுத்த சேலையூரில் ஆகஸ்டு 20ம் தேதி மாமன்னர் ஒண்டிவீரன் அவர்களின் 253 வது நினைவு தினத்தை முன்னிட்டு மாமன்னர் ஒண்டிவீரன் மக்கள் நல பொதுச்சங்கம் சார்பில் நினைவஞ்சலி கூட்டம்  நடைப்பெற்றது.கூட்டத்திற்கு பொதுசெயலாளர் எம்.கோபி அவர்கள் தலைமை தாங்கினார்.  சங்கத் தலைவர் எஸ்.ஜெய்கணேஷ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

இதில் சிறப்பு விருந்தினராக பாஜக  மாநில செயற்குழு உறுப்பினர் சா.நடராஜன் கலந்து கொண்டு ஒண்டி வீரனின் சிறப்புகள் குறித்து எடுத்தரைத்தார்.அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ஒண்டி வீரனின் புகைப்படத்திற்கு அனைவரும் மலர் தூவி மாரியதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் பழனி ஐயப்பன், முன்னாள் மகளிர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் காவியா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா சிங் மற்றும் செல்வராஜ், பாஜக இந்து ஆன்மீக பிரிவு மாவட்டச் செயலாளர் சாய் பாலு, முன்னாள் மாவட்ட செயலாளர் தகவல் தொழில்நுட்ப பிரிவு துவாரநாத், முன்னாள் மண்டல தலைவர் வெங்கட சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டு  மலர் தூவி மரியாதை செய்தனர்.

இறுதியாக கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சங்க சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஜி.ஆறுமுகம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment