பம்மல் தெற்கு பகுதி திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது
பம்மல் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பம்மல்-இரட்டை பிள்ளையார் கோவில் அருகில் தாம்பரம் மாநகராட்சி மண்டலம்-1 குழுத் தலைவர்-பம்மல் தெற்கு பகுதி கழக செயலாளர் வே.கருணாநிதி அவர்கள் தலைமையில் பகுதி கழக நிர்வாகிகள் ப.காளேஸ்வரன், ஆர்.உமாசங்கர்,என்.பன்னீர்செல்வம்,துரை.இளங்கோவன், பா.கவிதா, பா.டில்லி,இரா.கந்தவேலு, சு.மனோகர், ரா.கோகுல், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் L.பிரபு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் V. ரவிச்சந்திரன், தாம்பரம் மாநகர இளைஞரணி அமைப்பாளர் P.K.A. சத்ய பிரபு ஆகியோரது முன்னிலையில் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி சுமார் 1000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் வட்ட கழக செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட-மாநகர பகுதி அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், வட்ட கழக நிர்வாகிகள்,கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
No comments