கும்மிடிப்பூண்டி தொகுதி பூண்டி ஒன்றியத்தில் கலைஞர் அவர்களின் 6ம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது
திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி தொகுதி பூண்டி ஒன்றியத்தில் கலைஞர் அவர்களின் 6ம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.பூண்டி வடக்கு ஒன்றிய திமுக சார்பில்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் எம்.பொன்னுசாமி(எ)ஜான் அவர்களின் தலைமையில் பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.கே.சந்திரசேகர் அவர்களின் முன்னிலையில் சீத்தஞ்சேறி பஜார் பகுதியில் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர்.அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பூண்டி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒன்றிய நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கிளை கழக நிர்வாகிகள், கழக முன்னோர்கள், பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.
No comments