முத்தமிழ் அறிஞர் கலைஞர் 6ம் ஆண்டு நினைவு நாள்..... ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குமாறு டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ அறிக்கை
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளலரும் சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் விடுத்துள்ள அறிக்கை:
தமிழனத் தலைவர் அவர்கள் 5 முறை தமிழக முதல்வராக பொறுப்பேற்று அடித்தட்டு மக்களுக்கும் விவசாயி களுக்கும் ஏழைகளுக்கும் பல்வேறு தரப்பு மக்கள் பயன் பெறும் வகையில் சமுக நலத் திட்டங்களை நிறைவேற்றி தந்தவர் தலைவர் கலைஞர்.
2008-ல் ஆண்டு பொது விநியோக திட்டத்தில் 1 கிலோ அரிசி 1 ரூபாய்க்கு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர். 2009-ல் கலைஞர் காப்பீட்டு திட்டம் முலம் மருத்துவமனை களில் எற்படும் செலவை அரசே ஏற்கும் வகையில திட்டம் வகுத்தவர் தலைவர் கலைஞர்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் வருகிற ஆகஸ்ட் 07.08.2024 புதன்கிழமை அன்று முத்தழிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்க்கு உட்பட்ட ஒன்றிய நகர பேரூர். கிளை வார்டு தோறும் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தியும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கியும் ஆதரவற்றோர் இல்லங்களில் அறுசுவை உணவு வழங்கியும். தூய்மை பணியாளர்களுக்கு ஆடைகளை வழங்கியும் டாக்டர் கலைஞர் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்ப்போம்.
அது சமயம் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள் வார்டு கிளை செயலாளர்கள் பல்வேறு அணிகளின் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் வார்டு கிளை பேரூர் கிளை ஊர் கிளை உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட கழக இந்நாள் முன்னாள் நிர்வாகிகள் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாளில் தலைவரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் மேற்கண்ட நினைவு நாள் நிகழ்ச்சியினை நடத்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments