• Breaking News

    பொன்னேரி மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டம்


    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நேரடியாக தினக்கூலி வழங்கிடவும் பணி நிரந்தரம் செய்திடவும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சென்னை வடக்கு கிளை சார்பில் ஒப்பந்த ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டம் சென்னை வடக்கு கிளைதலைவர் கதிரேசன் தலைமையில் தோழர்கள் அருள்நாதன் ஸ்டாலின் திருநீர் செல்வம் ஜெயக்குமார் முன்னிலையில் நடைபெற்றது. 

    இதில் சென்னை வடக்கு கிளை கௌரவ தலைவர் மதனகோபால்  செயலாளர் சந்திரசேகர் பொருளாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் கண்டன உரை ஆற்றினர் சிஐடியு மாவட்ட தலைவர் விஜயன் மாநில துணைத்தலைவர் சாலட் செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர் தர்ணா போராட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    No comments