தாம்பரம்: பீர்க்கங்கரணை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டியை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா மாணவ,மாணவிகளுக்கு வழங்கினார்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி நான்காவது மண்டலத்திற்கு உட்பட்ட பீர்க்கங்கரணையில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வி துறை சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா அவர்கள் கலந்து சிறப்புரை ஆற்றி 273 பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்த விழாவில் பெருங்களத்தூர் தெற்கு பகுதி செயலாளர் சேகர்,மாமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி சங்கர், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் லயன் சங்கர், தலைமை ஆசிரியர் பொன்னுத்தாய்,வட்டச் செயலாளர் வெங்கடேசன் மற்றும் கழகத் நிர்வாகிகள் ஐசக் குமரேசன் யோபுகாந்த் சரஸ்வதி கணபதி தன தனசெயன் சுந்தர் வெங்கடேசன் கணேஷ் மோகன் பழனி பாண்டியன் ராஜா நிர்வாகிகள் பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
No comments