அறந்தாங்கி அருகே ஒப்பில்லாமணி அம்பாள் உடனுறை ஸ்ரீமெய்நின்ற நாத சுவாமி கோவில் பாடல் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு வெளியிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த கீரமங்கலம் தனியார் மண்டபத்தில் அப்துல் கலாம் வளர்ச்சி மற்றும் சேவை நிறுவனம் சார்பாக ஒப்பில்லாமணி அம்பாள் உடனுறை ஸ்ரீமெய்நின்ற நாத சுவாமி கோவில் பாடல் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த பாடல் இசை வெளியீட்டை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியை அப்துல் கலாம் வளர்ச்சி மற்றும் சேவை நிறுவனம் தலைமை முனைவர் தமிழ்தாசன் ஞான.தனசேகரன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
சிவன் கோவில் குருக்கள் சிவசிதம்பரம் வரவேற்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கீரமங்கலம் பேரூராட்சி தலைவர் சிவகுமார் மற்றும் குலமங்கலம் தெற்கு பஞ்சாயத்து தலைவர் ரஞ்சித்குமார் மற்றும் அப்துல் கலாம் வளர்ச்சி மற்றும் சேவை ஒருங்கிணைப்பாளர் கண்ணன் பரமாத்மா, சுதாராஜன், ஆனந்தி, மாரிமுத்து, குமார், மணிவண்ணன், விஜயகுமார், லலிதாகுமாரி, சியாமளா, ஹரிப்பிரியா, சதீஷ்குமார், பொன்னுச்சாமி, பரிமளா ஆகியோர் கலந்து கொண்டனர். சங்கீதா ராமதாஸ் நன்றியுரை கூறினார்
No comments:
Post a Comment