கும்மிடிப்பூண்டி தொகுதி பெருவாயள் டி.ஜெ.எஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ் புதல்வன் திட்டம் தொடக்கம் - MAKKAL NERAM

Breaking

Friday, August 9, 2024

கும்மிடிப்பூண்டி தொகுதி பெருவாயள் டி.ஜெ.எஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ் புதல்வன் திட்டம் தொடக்கம்


தமிழக முதல்வர் அவர்கள் கோயம்புத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளிலும் மற்றும் 6 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் பயின்று உயர் கல்விப் பயிலும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000/- உதவித்தொகை வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு பற்று அட்டைகளை (Debit card) வழங்கினார்கள்.

இந்நிகழ்வை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி தொகுதி பெருவாயல் அமைந்துள்ள டி.ஜெ.எஸ். கலைக் கல்லூரியிலும்,டி.ஜெ.எஸ் பாலிடெக்னிக் கல்லூரியிலும் பயிலும் மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000/- பெறுவதற்கான பற்று அட்டைகளை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர்.கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் அவர்கள் வழங்கினார்.உடன் மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய கழக பேரூர் கழக செயலாளர்கள்  டி .ஜெ.எஸ். கல்விக் குழுமத்தின் இயக்குனர்கள்,கல்லூரியின் முதல்வர்கள்,அணிகளின் அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள்,உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் ஆசிரியர் பெருமக்கள் மாணவர்கள் எனத் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment