நாகப்பட்டினம் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பயிற்சி அரங்கத்தில் வட்டார அளவிலான கீழ்வேளூர் தலைஞாயிறு மற்றும் வேதாரண்யம் வட்டாரத்திற்கு உட்பட்ட பிறதுறை அலுவலருக்கான பாலின மன்றம் குறித்தபயிற்சி நடைபெற்றது.இதில் தமிழ்நாடு மாநிலஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் /இணை இயக்குனர் அவர்களின் வழிகாட்டுதலுடன் கூடுகை மற்றும் கூட்டாண்மை உதவி திட்ட அலுவலர் இந்திராணி தலைமையில் உதவி திட்ட அலுவலர் சந்திரசேகர் வாழ்வாதாரம்,சண்முகவடிவு நிதி உள்ளாக்கம் முன்னிலையில் மாவட்ட வள பயிற்றுனர் Dr. ஸ்ரீரங்கபாணி கலந்து கொண்டு கருத்துரை வழங்கப்பட்டது.
இந்த பயிற்சியில் பாலின பிரச்சாரம் உறுதிமொழி குழந்தை திருமண தடுத்தல் குடும்ப வன்முறை தடுத்தல் பாலின பாகுபாட்டை கலைப்போம் பாலின வன்முறைக்கு எதிராக குரல் எழுப்புவோம் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்தல் பெண் உரிமையை பாதுகாப்போம் பாலின வன்முறைக்கு முடிவு கட்டுவோம் மிரட்டுதல் அடித்தல் நிகழ்காலம் எதிர்காலம் குறித்து பயத்தை ஏற்படுத்துதல் உடல் ரீதியான தொடர்பு தொடுதல் கிள்ளுதல் முத்தமிடுதல் உடலுறவு பாலியல் ரீதியாக கிண்டல் அடித்தல் ஆபாச படங்களை காட்டுதல் போன்றவையாகும்.
இந்த பயிற்சியில் கீழ்வேளூர் தலைஞாயிறு மற்றும் வேதாரணியம் வட்டாரத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சமூக நலத்துறை அலுவலர்கள் மருத்துவத்துறை அலுவலர்கள் கல்வித்துறை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்,தொண்டு நிறுவனங்கள்,ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஒன்றிய கவுன்சிலர் பெண் வட்டார இயக்க மேலாளர்,வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டமைப்பு பொறுப்பாளர் கலந்து கொண்டனர் .
ஜி.சக்கரவர்த்தி
மக்கள் நேரம் எடிட்டர்
விளம்பர தொடர்புக்கு
9788341834
No comments:
Post a Comment