தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயண தேவன் பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் பூமிநாதன். இவர் நாராயணத்தேவன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களின் நலனுக்காக பலவித போராட்டங்கள் நடத்தியுள்ளார்.
இவர் தற்போது தமிழக முழுவதும் பூரண மது விலக்கு வேண்டி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.இந்தப் போராட்டத்திற்கு அனுமதி வழங்காத ராயப்பன்பட்டி காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை செய்தனர். அவர் பேச்சு வார்த்தைக்கு உடன்படாததால் சமூக ஆர்வலர் பூமிநாதனை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இவ்வாறாக சமூக ஆர்வலர் பூமிநாதன் மதுவிலக்கு கோரி மூன்றாவது முறையாக சாகும் வரை உண்ணாவிர போராட்டத்திற்கு முயற்சி செய்தார். ஆனால் அவரை உண்ணாவிரத போராட்டம் நடத்த விடாமல் ராயப்பன்பட்டி காவல்துறையினர் மூன்றாவது முறையாகவும் கைது செய்து அழைத்து சென்றனர்.
சமூக ஆர்வலர் போராட்டம் நடத்தும் அவரின் சொந்த ஊரான நாராயண தேவன் பட்டி தேனி பாராளுமன்ற திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment