சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்( ICC) தலைவரானார் ஜெய்ஷா - MAKKAL NERAM

Breaking

Wednesday, August 28, 2024

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்( ICC) தலைவரானார் ஜெய்ஷா

 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பதவி வகிக்கும் கிரேக் பார்க்லேவின் பதவிக் காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில் இரண்டு முறை பதவி வகித்த அவர் மீண்டும் போட்டியிட போவதில்லை என அறிவித்தார்.

இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் பதவிக்கு ஆகஸ்ட் 27-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

மேலும் இந்த பதவிக்கு 16 வாக்குகள் தேவைப்படும் நிலையில் ஜெய்ஷாவை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதன் மூலம் இந்தியாவிலிருந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 5 வது தலைவராகவும், ஐசிசி வரலாற்றில் இளம் வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்ற சாதனையையும் ஜெய்ஷா படைத்துள்ளார்.

No comments:

Post a Comment