விசிகவுக்கு பாஜக 100 சதவீதம் ஆதரவு கொடுக்கும் - எச்.ராஜா அறிவிப்பு - MAKKAL NERAM

Breaking

Sunday, September 15, 2024

விசிகவுக்கு பாஜக 100 சதவீதம் ஆதரவு கொடுக்கும் - எச்.ராஜா அறிவிப்பு

 


தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது திருமாவளவன் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு வேண்டும் என்று கேட்டது தான் பரபரப்பான விஷயமாக பேசப்படுகிறது. இதற்கு திராவிட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சீமான் உள்ளிட்ட ஒரு ஆதரவு கொடுத்தனர். அந்த வகையில் தற்போது பாஜக கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் எச். ராஜாவும் திருமாவளவன் கருத்துக்கு வரவேற்பு கொடுத்துள்ளார்.

அதாவது ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு கேட்கும் திருமாவின் நியாயமான கோரிக்கையை தாங்கள் வரவேற்பதாக எச். ராஜா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். அவருடைய கோரிக்கைக்கு பாஜக 100 சதவீதம் ஆதரவு கொடுப்பதாக எச். ராஜா தெரிவித்துள்ளார்.

 மேலும் கடந்த 1997 ஆம் ஆண்டு மத்தியில் கூட்டணி ஆட்சி நடைபெறுவதாக சுட்டிக்காட்டிய திருமாவளவன் தனி பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றாலும் கூட ஆட்சியை கூட்டணி கட்சிகளுக்கும் பகிர்ந்து கொடுத்துள்ளதாக பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும் .

No comments:

Post a Comment