மாந்திரீகத்தில் ஈடுபட்ட 2 பெண்களை அடித்துக்கொன்ற கிராமத்தினர் - MAKKAL NERAM

Breaking

Sunday, September 15, 2024

மாந்திரீகத்தில் ஈடுபட்ட 2 பெண்களை அடித்துக்கொன்ற கிராமத்தினர்

 


மேற்குவங்காள மாநிலம் பீர்பம் மாவட்டம் ஹரிசாரா கிராமத்தை சேர்ந்த இளம்பெண்கள் லோக்கி கிஷு, டோலி சோரன்.

இவர்கள் இருவரும் மாந்திரீகத்தில் ஈடுபடுவதாக அந்த கிராம மக்கள் கருதினர். இதையடுத்து, நேற்று இரவு வீட்டில் இருந்த இருவரையும் கிராமத்தினர் 15க்கும் மேற்பட்டோர் வீட்டில் இருந்து வெளியே வரவழைத்துள்ளனர்.

பெண்கள் வீட்டில் இருந்து வெளியே வந்த நிலையில் கிராமத்தினர் சேர்ந்து இருவரையும் கடுமையாக தாக்கினர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் அருகில் இருந்த கால்வாய்க்குள் வீசிச்சென்றனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து கொல்லப்பட்ட 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தாக்குதல் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 15 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment