அடுத்தமுறை லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு மாநகராட்சி கூட்டத்திற்கு செல்வேன்..... பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன் பேச்சு..... - MAKKAL NERAM

Breaking

Wednesday, September 25, 2024

அடுத்தமுறை லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு மாநகராட்சி கூட்டத்திற்கு செல்வேன்..... பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன் பேச்சு.....


அடுத்தமுறை லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு மாநகராட்சி கூட்டத்திற்கு செல்ல உள்ளதாக பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன் தெரிவித்துள்ளார்.மேயர் பிரியாவின் தபேதார் மாதவி பணியிட மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவர் அளித்த பேட்டியில்,

லிப்ஸ்டிக் போடுவதும் போடாததும் ஒரு பெண்ணின் உரிமை அது குறித்து கேள்வி எழுப்பி, மாதவி பணியிட மாறுதல் செய்யப்பட்டு இருப்பது தவறானது.

லிப்ஸ்டிக் போடக்கூடாது என்று அரசாணை ஏதேனும் உள்ளதா என மாதவி கேட்டுள்ளார், அவரது கேள்வி நியாயமானது. சம உரிமை பேசுகிற திமுக இந்த விவகாரத்தில் தனிமனித உரிமையை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.

மாநகராட்சி ஊழியர் வயதானவர் அவர் லிப்ஸ்டிக் போடுவதை கேள்வி கேட்கும் திமுகவினர் ஸ்டாலின் வயதானவர் என்பதை ஒத்துக் கொள்ளாமல் இருப்பதும், முதலமைச்சர் மட்டும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என திமுக கருதுவது மட்டும் எப்படி நியாயமானதாக இருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினர்.

No comments:

Post a Comment