நிர்மலா சீதாராமனை தொடர்ந்து ஜேபி நட்டா மீதும் வழக்குப்பதிவு - MAKKAL NERAM

Breaking

Sunday, September 29, 2024

நிர்மலா சீதாராமனை தொடர்ந்து ஜேபி நட்டா மீதும் வழக்குப்பதிவு

 


டெல்லி உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பிரதான அரசியல் கட்சிகள் நிதி பெற்றுக் கொள்ளலாம் என்ற நடைமுறையை ரத்து செய்தது. இந்த தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜக கட்சிதான் அதிக அளவில் நிதி பெற்றதாக கூறப்பட்டது. அதாவது பெரிய நிறுவனங்களை மிரட்டி அமலாக்கத்துறையை வைத்து தேர்தல் பத்திரங்கள் மூலமாக ஜேபி நட்டா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் நீதி பெற்றதாக பெங்களூரு நீதிமன்றத்தில் ஜேஎஸ்பி துணை தலைவர் ஆதர்ஷ் ஆர்.ஐயர் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பெங்களூரு காவல் நிலையத்திற்கு ஜேபி நட்டா மற்றும் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது. மேலும் அதன்படி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் மத்திய அமைச்சர் ஜேபி நாட்டா மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment