கும்மிடிப்பூண்டி லயன்ஸ் கிளப் ஆப் சென்ட்ரல் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண்புரை முகாம் நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம்.லயன்ஸ் கிளப் ஆப் சென்ட்ரல் கும்மிடிப்பூண்டி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை கண்புரை அறுவை சிகிச்சை முகம் கும்மிடிப்பூண்டி பைபாஸ் லயன்ஸ் கிளப் அலுவலகத்தில் நடைபெற்றது நடைபெற்றது இதில்.மாவட்ட ஆளுநர் அரிமா ஏ.டி ரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற Day Long ப்ராஜெக்டில் முதல் துணை ஆளுநர் அரிமா மணி சேகர் அவர்களும் இரண்டாம் துணையாளர் அரிமா நரசிம்மன் மாவட்ட செயலாளர் அரிமா எழில் வளவன் மாவட்ட பொருளாளர் அரிமா தோட்டா சுதாகர் மற்றும் மாவட்ட தலைவர்கள் மண்டல தலைவர் அரிமா பாபு ராமலிங்கம் வட்டார தலைவர் அரிமா தயாளன் நட்பு சங்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களும் அனைவரும் உட்பட சென்னை சென்ட்ரல் கும்மிடிப்பூண்டி அரிமா சங்கத்தின் சார்பாக நடைபெற்ற டே லாங் மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
அதன் தலைவர் அரிமா லியோ சேகர் செயலாளர் அரிமா முத்துலிங்கம் பொருளாளர் அரிமா மனோகர் துணைத் தலைவர் அரிமா காமராஜ் சர்வீஸ் ஷேர் பர்சன் அரிமா திரு அப்துல் ஹமீது மற்றும் திரிலோகச்சந்தர் மற்றும் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் டி.சி.பி. ஐ கேர் அரிமா டிஎம்எஸ் மேகநாதன் அவர்கள் பொறுப்பேற்று நடத்திய கண்புரை அறுவை சிகிச்சை முகாமில் 51 நோயாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் கண்புரை அறுவை சிகிச்சை செய்திட அரவிந்த் ஐ கேர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக சென்னை சென்ட்ரல் கும்மிடிபூண்டி அரிமா சங்கத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களின் சார்பாக நடைபெற்ற day long ப்ரொஜெக்ட்டில் சுமார் 500க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரிசி புடவை வேட்டிகள் நிழல் குடைகள் அனைத்தும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
No comments