ஸ்ரீ திருமலை திருப்பதி சேவை சங்கம் மற்றும் தேனி பாரத் NRT மருந்துவமனை இணைந்து 22-09-2024 ஞாயற்றுக்கிழமை அன்று அல்லிநகரம் வடக்கு தெருவில் சேவை சங்கத்தின் அலுவலகம் அருகே இலவச பொது மருத்துவ முகாம் நடைபற்றது.
இந்நிகழ்ச்சியினை தேனி வைகை அரிமா சங்கத்தின் மண்டல தலைவர் திரு. S.கண்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார். அல்லிநகரம் நகர்மன்ற 5வது வார்டு கவுன்சிலர் திருமதி. கிருஷ்ண பிரபா, 6வது வார்டு கவுன்சிலர் திருமதி. அனுசியா அவர்கள் குத்துவிளக்கேற்றினர்.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு அல்லிநகரம் நாயுடு சங்க முக்கிய பிரமுகர்கள், தொழிலழிபர்கள், கிராம கமிட்டி தலைவர்கள் கலந்து கொண்டனர்.முகாம் நிகழ்ச்சிக்கு 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகள், இலவச மாத்திரைகள் வாங்கி பயன் பெற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு திருமலை திருப்பதி சேவை சங்கத்தின் தலைவர் திரு. S. சசிக்குமார், செயலாளர் திரு. S.மாரீஸ்வரன், பொருளாளர் திரு. P.குணகேசுரன் தலைமை தாங்கினர். மேலும் சேவை சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment